களக்காடு மக்கள் எப்படி நடக்குறாங்கனு பார்க்குறேன்?
திருநெல்வேலி மாவட்டம் களக்காடு கோட்டை பகுதியில் உள்ள பாரதிபுரம் மேல தெருவில் குவியல் குவியலாக கொட்டப்பட்டு கிடக்கும் சரல் கற்களால் பாதசாரிகள் உட்பட எந்த ஒரு வாகனமும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
சைக்கிள் செல்வதற்கு கூட பாதையை விடாமல் ஒப்பந்த பணியாளர்கள் மொத்தமாக ரோட்டினை மறித்து சரல் கற்களை கொட்டி வைத்துள்ளனர். அவசர மருத்துவ சிகிச்சை பெற கூட வாகனத்தில் செல்ல முடியவில்லை. இந்த பகுதி களக்காடு நகராட்சி மன்ற தலைவரின் வார்டு என்பதும் குறிப்பிடத்தக்கது . எனவே , சம்பந்தப்பட்ட நிர்வாகம் சரல் கற்கறை அப்புறப்படுத்தி சாலையில் மக்கள் நடக்க ஏற்பாடு செய்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.