சென்னை சென்ட்ரலில் பரபரப்பு - டிராவல் பேக்கில் சடலமாக கிடந்த சிசு

சென்டிரல் ரயில் நிலையத்தில் நின்றுக்கொண்டிருந்த ரயிலில் டிராவல் பேக்கில் மறைத்து வைத்திருந்த பச்சிளம் குழந்தை மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்தது.

மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் இருந்து ஹவுரா மெயில் எக்ஸ்பிரஸ் ரயகங் பேற்று மாலை சென்னை சென்டிரல் ரயில் நிலையத்திற்கு வந்தது. பயணிகள் அனைவரும இறங்கியப் பிறகு, ஊழியர்கள் ரயிலின்னுள் சுத்தம் செய்துக் கொண்டிருந்தனர். அப்போது, எஸ்10 பெட்டி, இருக்கை எண் 17-18ன் கிழ் டிராவல் பேக் ஒன்று இருந்தது.

இதில், வெடிபொருட்கள் இருக்கலாம் என்ற அச்சத்தில் ஊழியர்கள் இதுகுறித்து உடனடியாக ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே பாதுகாப்பு படையினர் வெடிபொருள் நிபுணர்களுடன் விரைந்து சம்பந்தப்பட்ட டிராவல் பேக்கை சோதனை செய்தனர்.

அப்போது, அந்த பேக்கில் பிறந்து 7 நாட்களே ஆன ஆண் குழந்தை ஒன்று மயங்கிய நிலையில் கிடந்தது. குழந்தையின் அருகில் துண்டு சீட்டு ஒன்றும், பால் பாட்டிலும் வைக்கப்பட்டிருந்தது. அந்த துண்டு சீட்டில், ‘யாராவது இந்த குழந்தையை தயவு செய்து எடுத்துக் கொள்ளுங்கள்’ என்று எழுதப்பட்டிருந்தது.

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த வெடிபொருட்கள் நிபுணர்கள் உடனே அந்த குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே மூச்சுத் திணறி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து, குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

குழந்தையை எங்கு, யார் விட்டு சென்றது ? என்பது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த பேக்கை உரிய நேரத்தில் யாராவது பார்த்திருந்தால் இந்த குழந்தையை உயிரோடு மீட்டிருக்கலாம் என்று அங்கிருந்தவர்கள் பேசிக்கொண்டனர்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>