கருணாநிதி பிறந்த நாள் : கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு மோதிரம்
தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 102 வது பிறந்த நாளை முன்னிட்டு நாகர்கோவில் மாநகர மேற்கு பகுதி செயலாளர் சேக் மீரான் தலைமையில் ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஜூன் 3ம் தேதி பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது. கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளரும் நாகர்கோவில் மாநகராட்சி மேயருமான மகேஷ் மோதிரங்களை குழந்தைகளுக்கு அணிவித்தார்.மாநகர செயலாளர் ஆனந்த், மண்டலத் தலைவர் அகஸ்டினா கோகிலாவாணி, கழக நிர்வாகி அகஸ்தீசன், மருத்துவக்கல்லூரி நிர்வாகத்தினர் கலந்து கொண்டனர்.