ஆர்.கே.நகர் தொகுதியில் 20 ரூபாய் நோட்டை காட்டியது யார்? - தினகரன்
ஆர்.கே. நகர் தொகுதியில் 20 ரூபாய் நோட்டுக்களைக் காண்பித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் மதுசூதனின் ஆட்களே என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் பாண்டியன் நகரில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நடைபெற்ற மே தின பொதுகூட்டத்தில் டிடிவி தினகரன் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “ஆர்.கே. நகர் தொகுதியில் 20 ரூபாய் நோட்டுக்களைக் காண்பித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் மதுசூதனின் ஆட்களே! இந்த ஆர்ப்பாட்டம் ஆர்.கே. நகர் மக்களைக் கொச்சைப்படுத்தும் விதமாக உள்ளது.
தங்களுக்கு யார் நன்மை செய்வார்கள் என்பதை மனதில் கொண்டே ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் என்னை வெற்றி பெற வைத்துள்ளனர். அந்த தேர்தலில் அதிமுக 180 கோடி ரூபாயை செலவு செய்தது. இல்லையென்றால், அந்த கட்சிக்கு டெபாசிட் கிடைத்திருக்காது” என கூறியுள்ளார்.