அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் பியூஷ் சாவ்லா ஓய்வு

ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய 3ஆவது வீரர் மும்பை, ஜூன்.06; ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய 3ஆவது வீரரான பியூஷ் சாவ்லா அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

சுழற்பந்து வீச்சாளரான பியூஷ் சாவ்லா, இந்தியாவுக்காக தனது கடைசி சர்வதேச போட்டியில் விளையாடி கிட்டத்தட்ட 13 ஆண்டுகளுக்குப் பின்னர் ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். 

தந்திரமான சுழற்பந்து வீச்சாளராக அறியப்பட்டிருக்கும் சாவ்லா, தனது விதிவிலக்கான  googlie பந்துவீச்சுக்கு பெயர் பெற்றவர். இந்திய அணிக்காக குறுகிய காலமே விளையாடிய போதிலும், சாவ்லா 2007 மற்றும் 2011 டி20 உலகக் கோப்பைகளை அணி வெல்ல பேருதவியாக இருந்தார். 

2006ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் அறிமுகமான பியூஷ் சாவ்லா, ரஞ்சி டிராபியில் சச்சின் டெண்டுல்களின் விக்கெட்டை வீழ்த்திய பின்னர் புகழின் உச்சிக்குச் சென்றார். இந்திய அணிக்காக 25 ஒருநாள் மற்றும் 7 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார்.  ஐபிஎல் போட்டிகளில் பஞ்சாப் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளிட்ட பல அணிகளுக்காக விளையாடியுள்ள பியூஷ் சாவ்லா, அவற்றில் 192 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தை சுனில் நரைனுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

More News >>