வீடில்லாமல் தவிக்கிறேன்- கதறும் ஜாக்கிசான் மகள்!
"என்னைப் புரிந்துகொள்ளாத பெற்றோரால் இன்று தங்க வீடு இல்லாமல் தவித்து வருகிறேன்" என கதறியுள்ளார் நடிகர் ஜாக்கி சானின் மகள் எட்டா.
சர்வதேச சூப்பர் ஸ்டார் நடிகர் ஜாக்கி சானின் மகள் எட்டா வீட்டை விட்டு வெளியேறி கடந்த அக்டோபர் மாதம் முதல் தவித்து வருகிறார். எட்டா ஒரே பாலின ஈர்ப்பு கொண்ட பெண். இதனால் பெற்றோருடன் ஒத்துப்போகாத காரணத்தாலும், தான் ஒரு லெஸ்பியன் என்பதால் பெற்றோர் தன்னை ஏற்க மறுப்பதால் கடந்த அக்டோபர் மாதம் வீட்டைவிட்டு வெளியேறி உள்ளார் எட்டா.
தற்போது தன் பெண் தோழியுடன் தெரிந்தவர் ஒருவரது வீட்டில் வசித்து வந்த எட்டா, தற்போது அந்த வீட்டிலிருந்தும் வெளியேறும் சூழல் உருவாகியுள்ளது. தன் பெண் தோழி கனடா நாட்டைச் சேர்ந்தவர் என்பதால் கனடாவுக்கு இடம்பெயர்ந்து சாலை ஓரங்களிலும் மேம்பாலங்களுக்கும் கீழேயும் தன் நாட்களைக் கழித்து வருகிறார் ஜாக்கி சானின் மகள் எட்டா.
எட்டா, தனக்கும் தன் பெண் தோழிக்கும் தங்குவதற்கு இருப்பிடம் கேட்டு சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது சர்வதேச கவனத்தைப் பெற்றுள்ளது. தங்களின் நண்பர்கள், உறவுகள் என யாரும் உதவி செய்ய முன்வரவில்லை என்பதால் சமூக வலைதளம் மூலம் உலக மக்களிடம் உதவி கேட்பதாக அந்த வீடியோவில் பதிவிட்டுள்ளார் ஜாக்கி சானின் மகள் எட்டா.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com