பேட்டை சத்யா நகர் பகுதியில் நாய்களுக்கு தடுப்பூசி
திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் சுகபுத்ரா உத்தரவின் பேரில் மாநகர நகர் நல அலுவலர் ராணி ஆலோசனையின் பேரில் நெல்லை பேட்டை பகுதியிலுள்ள 18 வது வார்டுக்குட்பட்ட சத்யா நகர் பகுதியில் இன்று( ஜூன் 9) தெருநாய்கள் பிடிக்கப்பட்டது. வார்டு கவுன்சிலர் சுப்பிரமணியன் சுகாதார ஆய்வாளர் இளங்கோ மேற்பார்வையாளர்கள் பெருமாள், முத்தையா ஆகியோர் தெருநாய்பள் பிடிக்கும் பணியை ஆய்வு செய்தனர். இதில் 22 தெரு நாய்கள் பிடிபட்டன. மேலும், வீடுகளில் வளர்க்கும் நாய்களுக்கு வெறி நாய் தடுப்பூசி போடப்பட்டது.