திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஜூன் 12 முதல் 14 வரை அதிகளவு மழை - வானிலை மையம் எச்சரிக்கை

திருநெல்வேலி, கன்னியாகுமரி தென்காசி மாவட்டங்களில் ஜூன் 12ம் தேதி முதல் 14ம் தேதி வரை மழை வெளுத்து வாங்குமென்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்ய தொடங்கி விட்டது. ஜூன் 12ம் தேதி தென்காசி, தேனி, கோவை , நீலகிரி மாவட்டங்களில் நல்ல மழை பெய்ய கூடும். 13ம் தேதி கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, தேனி, கோவை, நீலகிரி மாவட்டங்களில் அதிகளவில் மழை பெய்யும். 14ம் தேதி தென்காசி, திருநெல்வேலி, தேனி, கன்னியாகுமரி,திண்டுக்கல், கோவை, நீலகிரி மாவட்டங்களில் அதிகளவில் மழை பெய்ய கூடும்.

சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் குறைந்தளவே மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 125 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தியாவில் நடப்பாண்டில் மே மாதத்தில் அதிகளவு மழை கிடைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News >>