கேரளாவில் அதிர்ச்சி: ஓடும் காரில் இருந்து தாயும், மகளும் தவறி விழுந்தனர்!

கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டம் வெங்கராவில் நேற்று நிகழ்ந்த ஒரு அதிர்ச்சிகரமான சம்பவத்தில், ஓடும் காரில் இருந்து தாயும், மகளும் தவறி விழுந்தனர். காரின் கதவு சரியாக மூடப்படாததே இந்த விபத்துக்கு காரணம் என தெரிய வந்துள்ளது.

வெங்கராவில் உள்ள சந்தைப்பகுதி அருகே இந்த சம்பவம் நிகழ்ந்தது. தாயும் மகளும் காரில் பயணித்துக் கொண்டிருந்தபோது, திடீரென காரின் கதவு திறந்து, இருவரும் சாலையில் விழுந்தனர். நல்வாய்ப்பாக, அவர்களுக்குப் பின்னால் வந்த காரின் ஓட்டுநர், விபத்தைக் கண்டு உடனடியாக பிரேக் போட்டு தனது வாகனத்தை நிறுத்தினார்.

இந்த துரித செயல் காரணமாக, தாயும், மகளும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். உடனடியாக அப்பகுதி மக்கள் அவர்களுக்கு உதவி செய்து, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், கார் போன்ற வாகனங்களில் செல்வோர் கதவுகளை சரியாக மூடிவிட்டு பயணிக்க வேண்டியதன் அவசியத்தை மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளது.

More News >>