குளு குளு மாம்பழ ஐஸ் கிரீம் ரெசிபி
வெயிலுக்கு இதமா ஐஸ் கிரீம் சாப்பிட எவ்ளோ நல்லா இருக்கும்.. அதை நாம் வீட்டுலயே ஈஸியா செய்து சாப்பிடலாமே.. இதோ உங்களுக்கான மாம்பழ ஐஸ் கிரீம் ரெசிபி எப்படி செய்றதுன்னு பார்ப்போம்..
தேவையானபொருட்கள்:
பெரிய மாம்பழம் - 2பால் - 1 கோப்பைவெண்ணிலா ஐஸ்கிரீம் - 1 கோப்பைஜெல்லி - 2 மேஜைக் கரண்டி
செய்முறை:
பாலை சுண்டக் காய்ச்சி குளிர வைக்கவும். மாம்பழத்தை கழுவி தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் போட்டு கூழாக அரைத்துக் கொள்ளவும். குளிரவைத்த பாலுடன் ஜெல்லி சேர்த்து நன்கு அடித்துக் கலந்து, அதனையும் மாம்பழச் சாறுடன் சேர்க்கவும்.
பால் கலந்த மாம்பழச்சாற்றை குளிர்சாதனப் பெட்டியில் சுமார் 2 மணி நேரம் வைத்து குளிர வைக்கவும். பின்னர் வெளியே எடுத்து வெண்ணிலா ஐஸ்கிரீம் சேர்த்து பரிமாறவும்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com