மனோன்மனியம் சுந்தரனார் பல்கலையில் வேலை வாய்ப்பு கலந்தாய்வு முகாம்... 169 பேர் தேர்வு

நெல்லை மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு தனிதிறன் திட்டத்தின் கீழ் ஏ2000 சொலூயூசன் நிறுவனத்துடன் இணைந்து ஜூன் 10,11ம் தேதிகளில் வேலை வாய்ப்பு கலந்தாய்வு முகாம் நடைபெற்றது. வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்க 550 பேர் இணையம் வாயிலாக பதிவு செய்திருந்தனர். 350 பேர் நேரடியாக கலந்து கொண்டனர்.

இவர்கள் செயற்கை நுண்ணறிவு, சைபர் கிரைம், எலக்ரிக் வாகனத்துறை, சென்சார் தீர்வு துறைகளில் 169 பேர் பயிற்சியுடன் கூடிய வேலை வாய்ப்புக்கு தேர்வு செய்யப்பட்டனர். இதை தொடர்ந்து ஏ2000 கல்வி இணைப்பு என்ற மையத்தை பல்கலைக்கழக துணை வேந்தர் என். சந்திரசேகர் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பதிவாளர் ஜே. சாக்ரடீஸ் பணியிட செயலாளர்கள் சுந்தர்ராமன், தினேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

More News >>