#SK 13- அடுத்த ஹிட் தரத் தயாரானார் சிவகார்த்திகேயன்!
சின்னத்திரையில் அறிமுகமாகி, இன்று தமிழ் திரைத்துறையின் மாஸ் ஹீரோவாக வளர்ந்துள்ள நடிகர் சிவகார்த்திகேயனின் புதிய பட ஷூட்டிங் இன்று பூஜையுடன் தொடங்கியது.
வருத்தப்படாத வாலிபர் சங்கம், எதிர்நீச்சல், காக்கிச் சட்டை, மான் கராத்தே, ரெமோ போன்ற காமெடி அம்சம் நிறைந்த திரைப்படங்கள் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் மையம் கொண்டார் சிவா. இதையடுத்துதான் ஒரு மாஸ் ஹீரோ சப்ஜெக்டான `வேலைக்காரன்’-ல் நடித்தார்.
இந்நிலையில், `வேலைக்காரன்’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் சிவகார்த்திகேயன், `எஸ்.எம்.எஸ்’ புகழ் ராஜேஷ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்தத் திரைப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இந்தப் படத்தில் நகைச்சுவை நடிகர் சதீஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்தப் படத்தின் ஷூட்டிங் இன்று பூஜை போட்டு தொடங்கப்பட்டது. இன்னும் இந்தப் படத்துக்கு பெயர் வைக்கப்படவில்லை. சிவகார்த்திகேயன் நடிக்கும் 13-வது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரையில் பெயர் சூட்டப்படாத இத்திரைப்படம் #SK13 என்ற ஹேஷ்டேக் மூலமே இந்தப் படம் இப்போது அறியப்பட்டு வருகிறது.