ரன்வேயில் இருந்து மேலேழும்பி தள்ளாடிய ஏர் இந்தியா விமானம்... அகமதாபாத் அதிர்ச்சி
அகமதாபாத்தில் இருந்து லண்டன் காட்விக் விமான நிலையம் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் கீழே விழுந்து வெடித்து சிதறியது. விமானத்தில் இருந்த 242 பயணிகள் நிலை என்னவென்று தெரியவில்லை.
இந்த விமானம் 787- 8 ட்ரீம்லைனர் ரகத்தை சேர்ந்தது. அகமதாபாத்தின் மெகானிநகர் பகுதியில் விமானம் விழுந்து சிதறியதில் கரும்புகை வான் நோக்கி எழுந்தது. அகமதாபாத் விமான நிலைய ரன்வேயில் இருந்து மேலேழும்பிய நில நிமிடங்களில் தள்ளாடியபடியே விமானம் தரையில் விழுந்தது. அவசர தகவல்களை http://airindia.com என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்
குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி விமானத்தில் இருந்துள்ளார்.