தூத்துக்குடி : தேர்தல் பணியாற்றுவது எப்படி? தொண்டர்களுக்கு கனிமொழி எம்.பி அறிவுரை
வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான களப்பணிகளை வியூகம் அமைத்து திமுகவினர் செயலாள்ள வேண்டுமென தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் கனிமொழி எம்பி பேசினார்.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் மறவன் மடத்திலுள்ள தனியார் ஹோட்டலில் இன்று (ஜூன் 12) நடைபெற்றது.கூட்டத்திற்கு தெற்கு மாவட்ட செயலாளரும் மீன்வளத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ராதா கிருஷ்ணன் தலைமை தாங்கினார். கூட்டத்தில், திருச்செந்தூர், ஓட்டப்பிடாரம், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி எம்.பி கனிமொழி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், 'ஆலோசனை கூட்டம் என்பது வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில் நம்முடைய பணியை எப்படி ஆற்ற வேண்டும்? அதற்கான களபணிகளையும்,வியூகங்களை எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும் . தேர்தலில் நம்முடைய எதிரணியில் நிற்பவர்கள் யார் ? போன்றவர்களை அறிந்து செயலாற்ற வேண்டும். நாம் எப்படி செயலாள்ள வேண்டுமென்பதை, சமீபத்தில் நடந்து முடிந்திருக்கக் கூடிய பொது குழுவில் முதல்வர் மிகத் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளார். கழகத்துக்கு புதிய உறுப்பினர்களை சேர்க்கக்கூடிய மிக முக்கியமான பொறுப்பை முதல்வர் நமக்கு அளித்திருக்கிறார். அந்த பணியை நாம் இன்றிலிருந்து முதல் தொடங்க வேண்டும். முன்பே துவங்கியிருந்தால் அவர்களுக்கு வாழ்த்துக்கள் என்று பேசினார்.
கூட்டத்தில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், திருச்செந்தூர் ஓட்டப்பிடாரம் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.