ஜெயலலிதா மரணம் - 60 பேருக்கு சம்மன்
ஜெயலலிதா மரணம் தொடர்பாக, விசாரணை ஆணையம் 60 பேருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.
ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்தது. சென்னை எழிலகத்தில் கலசமஹாலில் அந்த ஆணையம் இயங்கி வருகிறது.
ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையை ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக 60 பேருக்கு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. யார் யாருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ள என்ற பட்டியலை விசாரணை ஆணையம் வெளியிட வில்லை.விசாரணைக்கு இடையூறு ஏற்படும் என்பதால் சம்மன் அனுப்பட்டவர்களின் பெயர்கள் வெளியிடவில்லை என விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது.
சம்மன் அனுப்பட்ட 60 பேரில் 27 பேர் நேரில் ஆஜராக விசாரணை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே, ஜெயலலிதா மரணம் தொடர்பாக 25 பிரமாண பத்திரங்கள், 70க்கும் மேற்பட்ட புகார் கடிதங்கள் வந்திருப்பதாக கூறப்படுகிறது.