கருணையும் அதிரடியும் ...திருநெல்வேலி மேற்கு துணை ஆணையர் பிரசன்ன குமார் யார்?

திருநெல்வேலி மாநகர காவல்துறையின் புதிய மேற்குத் துணை ஆணையராக டாக்டர். பிரசன்னா குமார் இன்று பொறுப்பேற்றார். இவரது சொந்த ஊர் பாண்டிச்சேரி - காஞ்சிபுரம் பார்டர் பகுதியாகும். தமிழ், பிரெஞ்சு, ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் சரளமாக பேசுவார். இவரது பெற்றோரில் ஒருவர் வங்கி ஊழியர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற டாக்டர். பிரசன்னா குமார் 2030-ல் டிஐஜி, 2035-ல் ஐஜி மற்றும் 2040-ல் ஏடிஜிபி ஆகவும், 2045-ல் டிஜிபி ஆகவும் பதவி உயர்வு பெற வாய்ப்புள்ளது. ஜிப்மரில் (JIPMER) எம்பிபிஎஸ் பட்டம் பெற்ற இவர், இதற்கு முன்பும் 2017 ஆம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தாலும், எதிர்பார்த்த பணி கிடைக்காததால் அப்போது வேலையில் சேரவில்லை. நான்கு முறை நேர்முகத் தேர்வில் பங்கேற்று இரண்டு முறை தரவரிசையில் இடம் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சமூக சேவையிலும் ஆர்வம் கொண்ட டாக்டர். பிரசன்னா குமார், "Smile Foundation" என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை தொடங்கி ஏழை குழந்தைகளின் கல்விக்கு உதவி வருகிறார். புதுச்சேரியின் சிறந்த என்ஜிஓ விருதையும் இவரது அறக்கட்டளை பெற்றுள்ளது. தனது சிவில் சர்வீஸ் தேர்வை ஆங்கில மொழியில் எழுதினார். பிரிலிமினரி தேர்வில் பிராந்திய மொழிகளில் கேள்வித்தாள்கள் இல்லாததால், இந்தி பேசாத மாணவர்கள் சந்திக்கும் சிரமங்களையும் இவர், சுட்டிக்காட்டியவர்.

கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19 ஆம் தேதி நாங்குநேரி கூடுதல் காவல் கண்காணிப்பாளராக (ஏ.எஸ்.பி.) பொறுப்பேற்ற டாக்டர். பிரசன்னா குமார் தற்போது பதவி உயர்வு பெற்று நெல்லை மாநகர காவல்துறையில் மேற்குத் துணை ஆணையராக பொறுப்பேற்றுள்ளார். நாங்குநேரியில் அவர் பணியாற்றிய காலத்தில் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

நாங்குநேரியில் காட்டிய அதே அதிரடியை நெல்லை நகரிலும் அவர் தொடருவார் என்று தாராளமாக நம்பலாம். இப்போதே, ரவுடிகள் கலக்கத்தில் இருப்பதாக தகவல்.

More News >>