கண் விழித்த போது, சுற்றிலும் கிடந்தன- உயிர் தப்பிய ஒரே பயணி சொல்லும் தகவல்
அகமதாபாத்தில் இருந்து லண்டன் காட்விக் விமான நிலையம் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் கீழே விழுந்து வெடித்து சிதறியது. இந்த விமானம் 787- 8 ட்ரீம்லைனர் ரகத்தை சேர்ந்தது. அகமதாபாத்தின் மெகானிநகர் பகுதியில் விமானம் விழுந்து சிதறியதில் கரும்புகை வான் நோக்கி எழுந்தது. அகமதாபாத் விமான நிலைய ரன்வேயில் இருந்து மேலேழும்பிய நில நிமிடங்களில் தள்ளாடியபடியே விமானம் தரையில் விழுந்தது.
விபத்தில் விமானத்தில் இருந்தவர்கள் மட்டுமல்லாமல் விமானம் மோதிய கட்டடத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்த மருத்துவ மாணவர்களும் இறந்ததாக தகவல்ககள் உள்ளன. இந்த விபத்தில் விமானத்தில் 244 பேர் இருந்த நிலையில், ஒரே ஒரு பயணி மட்டும் உயிர் தப்பியுள்ளார்.அவர், பெயர் விஷ்வாஸ் குமார் ரமேஷ்.
தற்போது, 40 வயதான இவர், விமானத்தின் எக்ஸிட் கேட் அருகே இருந்த இருக்கையில் இருந்ததால், அதன் வழியாக தப்பித்துள்ளார். தற்போது, மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் அவர் விபத்து குறித்துகூறுகையில், 'விமானம் மேலேழும்பிய 30வது விநாடியில் பெரிய சத்தம் கேட்டது. அதற்கு பிறகு,விமானத்தால் பறக்க முடியவில்லை. எல்லாமே கண் இமைக்கும் நேரத்தில் நடந்து விட்டது. விமானத்தில் இருந்து வெளியே விழுந்த நான் கண் விழித்த போது, என்னை சுற்றிலும் சடலங்கள் கிடந்தன. நான் எழுந்து ஓட தொடங்கினேன். '
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.