787-8 போயிங் ட்ரீம்லைனர்...இதுதான் முதல் விபத்து, தமிழருக்கு கெட்ட பெயரா?

அமெரிக்காவின் போயிங் நிறுவனத்தின் தயாரிப்பான 787-8 ட்ரீம்லைனர் விமானம் கடந்த 2009ம் ஆண்டு சந்தைக்குள் வந்தது. சுமார், 1000 ட்ரீம்லைன் விமானங்கள் வானத்தில் பறந்து கொண்டிருக்கின்றன. இதுவரை, இந்த ரக விமானங்கள் விபத்தில் சிக்கியதில்லை. இந்த தகவலை ஏவியேஷன் சேஃப்டி நெட்ஒர்க்கும் உறுதிபடுத்தியுள்ளது. முதல் முறையாக அகமதபாத்-லண்டன் விமானம் விபத்தில் சிக்கியுள்ளது. முறையான பராமரிப்பு இல்லாததே இதற்கு காரணமென்றும் சொல்கிறார்கள்.

விமானத்துறையை பொறுத்தவரை, பல நிறுவனங்கள் இருந்தாலும், அமெரிக்காவின் போயிங், பிரான்சின் ஏர்பஸ் நிறுவனமும்தான் முக்கிய போட்டியாளர்கள். ஒவ்வொரு ஆண்டும் பாரிஸ் நகரில் நடக்கும் ஏர் ஷோவில் இரு நிறுவனங்களும் தங்கள் புதிய தயாரிப்புகளை காட்சிப்படுத்தும். அந்த வகையில், இந்த ஆண்டு வரும் ஜூன் 16ம் தேதி பாரீஸ் ஏர் ஷோ தொடங்குகிறது. இந்த சமயத்தில், இத்தகைய விபத்து நடந்திருப்பது போயிங் நிறுவனத்துக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக நிபுணர்கள் சொல்கிறார்கள்.

அதேவேளையில், டாடா குழுமம் , விபத்தில் சிக்கி இறந்தவர்களின் குடும்பத்துக்கு 1 கோடி நிதி அறிவித்துள்ளது. காயமடைந்தவர்களின் மருத்துவ செலவு உள்ளிட்டவையை டாடா குழுமமே ஏற்றுக் கொள்ளும்.அதோடு, விமானம் மோதிய பி.ஜே. மருத்துவக் கல்லூரியின் விடுதியையும் கட்டி கொடுக்க போவதாக டாடா குழுமம் அறிவித்துள்ளது. இந்த தகவலை டாடா குழும தலைவர் என். சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

டாடா குழுமத் தலைவராக சந்திரசேகரன் பொறுப்பேற்ற பிறகு, முன்பை விட வேகமாக வளர்ச்சி கண்டது. இவரின் , முழு முயற்சியில்தான், ஏர் இந்தியா நிறுவனத்தை இந்திய அரசிடம் இருந்து டாடா குழுமம் வாங்கியது. எனினும், இந்த விபத்தால், சந்திரசேகரன் கடுமையாக விமர்சிக்கப்பட வாய்ப்புள்ளது.

ஏனென்றால், இதற்கு முன்பும், பல பயணிகள் ஏர் இந்தியா விமானங்களின் மோசமான தரம், சேவை குறித்து சமூகவலைத்தளங்களில் விமர்சித்து பதிவிட்டுள்ளனர். நாட்டின் நம்பகத்ததன்மை மிகுந்த நிறுவனம் தற்போது, வாங்கியிருப்பதால், ஏர் இந்தியா மீண்டும் நல்ல நிலைக்கு வருமென்றும் பலரும் நம்பிக்கை கொண்டிருந்தனர். ஆனால், இந்த விபத்து அத்தனையையும் புரட்டி போட்டு விட்டது.

என். சந்திரசேகன் நாமக்கல் நகரை பூர்வீகமாக கொண்டவர்.

More News >>