10 நிமிடம்...தப்பித்த பூமி சௌகான்
அமெரிக்காவின் போயிங் நிறுவனத்தின் தயாரிப்பான 787-8 ட்ரீம்லைனர் விமானம் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட போது, விபத்தில் சிக்கியது. விமானத்தில் இருந்த ஒருவரை தவிர அனைவரும் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில், இந்த விமானத்தில் பயணிக்காததால், ஒரு பெண் உயிர் தப்பியுள்ளார். அவரின் பெயர் பூமி சவுகான். 10 நிமிடம் தாமதமாக வந்ததால் , விமான நிலைய அதிகாரிகள் அவரை விமான நிலையத்துக்குள் அனுமதிக்கவில்லை. இன்று மதியம் 1.30 மணியளவில் அவர் அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையத்தை விட்டு வெளியேறியுள்ளார். 1.38 மணிக்கு விமானம் விபத்துக்குள்ளானது.
இது குறித்து பூமி சௌகான் கூறுகையில், என்னால் இந்த விபத்தை நம்பவே முடியவில்லை. உயிரிழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். கணபதிதான் என்னை காப்பாற்றியுள்ளார்.எனது , உடலே புல்லரிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு எனது ஆறுதல்கள் என்று தெரிவித்துள்ளார்.
கணவருடன் லண்டனில் வாழ்ந்து வரும் பூமி சௌகான், விடுமுறைக்கு தாய் நாடு வந்து விட்டு மீண்டும் திரும்பும் போது, விமானத்தை தவறவிட்டதால், உயிர் பிழைத்தார்.