கடைசி செல்பியும்... ஒரு வழிபாதையான லண்டன் பயணமும்

அகமதாபாத்தை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜீனியர் பிரதீக் ஜோஷி, கடந்த 6 ஆண்டுகளாக லண்டனில் வசித்து வந்தார். இவரது, மனைவி கோமி வியாஸ். மருத்துவரான இவர்,அகமதாபாத்தில் தனது 3 குழந்தைகளுடன் வசித்தார். பிரதீஷ் ஜோஷிக்கு தன் குடும்பத்துடன் லண்டனில் செல்டில் ஆக ஆசை. இதற்கான பேப்பர் ஒர்க், விசா நடைமுறைகள் எல்லாம் முடிந்த பிறகு நேற்று விபத்துக்குள்ளான விமானத்தில் லண்டனுக்கு பயணம் மேற்கொண்டனர்.

முன்னதாக, நினைவாக இருக்கட்டுமே என்ற எண்ணத்தில் பிரதீக் ஜோஷி மனைவி கோமி வியாஸ், குழந்தைகளுடன் செல்ஃபி எடுத்தார். அந்த செல்பியை உறவினர்களுக்கு அனுப்பி மகிழ்ந்தார். ஆனால், இதுதான் தங்களது கடைசி செல்பியாக இருக்கும் என்று அவர்களுக்கு அப்போது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. விமானம் புறப்பட்ட 5 நிமிடத்தில் விபத்தில் சிக்க இப்போது,5 பேருமே உயிருடன் இல்லை.

லண்டன் பயணம் இந்த குடும்பத்துக்கு ஒரு வழி பாதையாக மாறி போனது. ஒரு குடும்பமே அழிந்தும் போனது. வாழ்க்கைதான் எத்தனை கொடூரமானது என்பதை இந்த சம்பவம் நமக்கு உணர்த்துகிறது என்றே சொல்ல தோன்றுகிறது.

More News >>