கொடுமுடியாறு நீர் தேக்கத்தில் இருந்து கார் பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு
திருநெல்வேலி மாவட்டத்தில் கார் பருவ சாகுபடிப் பணிகளைத் தொடங்கும் விதமாக, கொடுமுடியாறு நீர் தேக்கத்தில் இருந்து பாசனத்திற்காக இன்று (ஜூன் 13 ) காலை 10 மணிக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர் அப்பாவு மாவட்ட ஆட்சித் தலைவர் சுகுமார் முன்னிலையில் தண்ணீரைத் திறந்துவைத்தார்
இந்நிகழ்வில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர்.
கோடைக்காலத்திற்குப் பிறகு கார் பருவ சாகுபடிக்காகத் தண்ணீர் திறக்கப்பட்டிருப்பது, அப்பகுதி விவசாயிகள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நீர் திறப்பு, விவசாயப் பணிகளுக்குப் புத்துயிர் அளித்து, நல்ல மகசூலுக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் மூலம் நாங்குநேரி மற்றும் வள்ளியூர் வட்டாரத்தில் 5781 ஏக்கர் விவசாய நிலம் பயன்பெறும்.