குற்றாலத்தில் குளு, குளு சீசனில் பலான தொழில்: லாட்ஜ் உரிமையாளர் உட்பட 4 பேர் கைது.
தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் தற்போது சீசன் தொடங்கியுள்ளது.சீசனை அனுபவிப்பதற்காக நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலம் அருவிகளுக்கு வருகின்றனர். இதனால், குற்றாலம் பகுதியில் உள்ள விடுதிகள், லாட்ஜ்கள் முழுவதும் ஹவுஸ் ஃபுல்லாக உள்ளது.
ஒரு சில விடுதிகளில் இந்த சீசனை பயன்படுத்தி விபசார தொழில் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, குற்றாலம் போலீசார் லாட்ஜ்களில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது, பராசக்தி நகர் பகுதியிலுள்ள ஒரு லாட்ஜில் விபசாரம் நடப்பதை கண்டறிந்தனர்.
அங்கிருந்த இளம் பெண்களைமீட்டு, காப்பகத்தில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக, சிவகாசியை சேர்ந்த மாரி , முருகன் திருவேங்கடம் பகுதியை சேர்ந்த மாரியப்பன், லாட்ஜ் உரிமையாளர் நில் ராஜரத்தினம் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.