முதியோர் இல்லத்தில் உணவருந்திய 4 பேர் பலியான சம்பவம் - உரிமையாளருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்.
தென்காசி மாவட்டம், சுந்தரபாண்டியபுரம் பகுதியில் செயல்பட்டு வந்த அன்னை முதியோர் இல்லத்தில் இறைச்சி உணவு சாப்பிட்ட நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சாம்பவர் வடகரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இது தொடர்பாக, காப்பகத்தின் உரிமையாளரான ராஜேந்திரன் என்பவர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
பின்னர், அவருக்கு ராஜேந்திரனுக்கு முறையான மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட்னர். தொடர்ந்து அவரை போலீசார் செங்கோட்டை நீதித்துறை நடுவர் முன்பு ஆஜர் செய்தனர்.
அவரிடம் விசாரணை நடத்திய செங்கோட்டை நீதித்துறை நடுவர் அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.