பேட்டை: அந்தோணியார் கோவில் திருவிழாவில் பக்தர்களுக்கு குளிர்பானம் வழங்கிய எஸ்.டி.பி.ஐ கட்சியினர்
திருநெல்வேலி பேட்டை புனித அந்தோனியார் ஆலய தேர்விழாவில் கிறிஸ்தவ மக்களுக்கு எஸ்.டி.பி.ஐ கட்சி யின் சார்பில் குளிர்பானம் வழங்கப்பட்டது.
திருநெல்வேலி பேட்டையில் புனித அந்தோணியார் ஆலயம் அமைந்துள்ளது . இங்கு நேற்று தேர் திருவிழா நடைபெற்றது. இந்த விழாவில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டனர். அப்போது, பேட்டை 20 வது வார்டு தலைவர் ஜெய்லானி தலைமையில் ஊர்வலத்தில் வந்த மக்களுக்கு குளிர்பானம் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் இஸ்மாயில், தொகுதி செயலாளர் பயாஸ் , வார்டு மற்றும் கிளை நிர்வாகிகளான ஷாஜகான் , முகம்மது இபுராகீம் , கோதரப்பா, அப்பாஸ், நியாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.