முதல்வர் திறந்து வைத்தார் அதிகாரிகள் முடக்குகின்றனர் பாளையங்கோட்டை மார்க்கெட் எப்போது பயன்பாட்டுக்கு வரும்?

நெல்லை மாநகர் பாளையங்கோட்டையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூபாய் 44 கோடியில் மகாத்மா காந்தி பொதுச் சந்தை கட்டப்பட்டுள்ளது. இதனை, தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த பிப்ரவரி மாதம் திறந்து வைத்தார். இந்த வளாகத்தில் 500க்கும் மேற்பட்ட கடைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. ஆனால், முதல்வர் திறந்து வைத்து 5 மாதங்களாகியும் இன்றுவரை பொதுச்சந்தை பயன்பாட்டுக்கு வரவில்லை. பொதுச் சந்தையில் இருபுறமும் உள்ள வழிப்பாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டு அடைக்கப்பட்டுள்ளது.

திறக்கப்படாத கடைகளில் சமூக விரோத கும்பல் இரவு நேரங்களில் மதுபானங்களை அருந்துகின்றனர். அங்கேயே படுத்தும் கொள்கின்றனர். சந்தையை திறக்க கோரியும், ஆக்கிரப்புகளை அகற்றவும் உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி நெல்லை மாநகராட்சியின் ஒன்பதாவது வார்டு திமுக கவுன்சிலர் சுப்புலட்சுமி, மற்றும் 33 வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலர் லட்சுமி ஆகியோர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து கவுன்சிலர் சுப்புலட்சுமி கூறுகையில், வளாகத்திற்குள் தேங்கும் மழைநீர் மற்றும் கழிவு நீர் வெளியே செல்வதற்கான எந்த வசதிகளும் செய்யப்படவில்லை. மாநகராட்சி ஆணையாளரிடம் பல முறைதெரிவித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கை எடுக்கப்படவில்லை . எனவே நாங்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டோம் என்கிறார்.

More News >>