கமல்ஹாசன் எம்.பியை சந்தித்த ராபர்புரூஸ் எம்.பி
கடந்த 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை கமல்ஹாசன் தொடங்கினார் கமல் ஹாசன். 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் இவரது கட்சி முதன் முதலாக தேர்தலைச் சந்தித்தது. இந்த தேர்தலில் கிட்டத்தட்ட மாநிலங்கள் முழுவதும் சுமார் 15 லட்ச வாக்குகளைப் பெற்றது.
அதேபோல் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹசன் போட்டியிட்டார். அப்போது, பாஜகவின் வானதி சீனிவாசனிடம் 1728 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.
பின்னர், திமுக கூட்டணியில் கமல்ஹாசன் ஐக்கியமானார். தற்போது, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் மாநிலங்களவை உறுப்பினராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு திரைத்துறையினர் தொடங்கி அரசியல் கட்சித் தலைவர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
அந்த வகையில், நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ் நேற்று சென்னையில் கமல்ஹாசனை சந்தித்து பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார். களக்காடு ராஜேஷ் அப்போது உடன் இருந்தார்.