இனி சிம் கார்டு பெற ஆதார் தேவையில்லை - மத்திய அரசு அதிரடி
சிம் கார்டு வழங்குவதற்கான முறைகளில், ஆதார் எண் தேவை இல்லை என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்திய நாட்டைப் பொறுத்தவரை அனைத்து சலுகைகள் மற்றும் அரசு அலுவலகங்கள் உள்ளிட்டவற்றிற்கு ஆதார் எண் இணைப்பது அவசியமாக்கப்பட்டு உள்ளது. மேலும், வங்கிக் கணக்குகள் முதல் வீட்டுக்கு சிலிண்டர் இணைப்பு வாங்குவது வரை ஆதார் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
ஆதார் எண் கட்டாயமாக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும் இதில் செல்போன் எண்ணுடன் ஆதார் எண்ணையும் இணைப்பது அவசியம் என தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வற்புறுத்தி வருவதாக புகார் கூறப்படுகிறது. இதனையடுத்து சிம் கார்டு வழங்குவதற்கான முறைகளில், ஆதார் எண் தேவை இல்லை என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் வாடிக்கையாளர்களின் சிரமங்களை குறைக்கவும் தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதன்படி செல்போன் சிம் கார்டுக்காக ஆதார் அட்டையை வாடிக்கையாளர்களிடம் கட்டாயபடுத்தக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com