வள்ளியூரில் த.வெ.க சார்பில் இலவச மருத்துவ முகாம்... டாக்டர். கிறிஸ்டோபர் தலைமையில் நடந்தது

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் தவெக தெற்கு மாவட்டம் சார்பில் டாக்டர் எஸ். கே. கிரிஸ்டோபர் தலைமையில் நேற்று( ஜூன் 15)இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. காமராஜ் நகரிலுள்ள முத்து செந்தூர் மஹாலில் காலை 8.30 மணி முதல் 1.30 மணி வரை நடந்த இந்த முகாமை திருநெல்வேலி தெற்கு மாவட்ட செயலாளர் ராஜகோபால் தொடங்கி வைத்தார்.

முகாமில் சிறப்பு சிகிச்சை, பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, எலும்பியல் சிகிச்சை, பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவம், தோல் சிகிச்சை, கண் பரிசோதனை, பல் சிகிச்சை போன்றவை அளிக்கப்பட்டன. தேவையான மக்களுக்கு ரூ. 5 ஆயிரம் மதிப்பிலான சிகிச்சை முற்றிலும் இலவமாக அளிக்கப்பட்டது. இந்த மருத்துவ முகாமில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

இதற்கான, ஏற்பாடுகளை தமிழக வெற்றிக்கழக மாவட்ட மருத்துவரணி அமைப்பாளர் டாக்டர் எஸ்.கே.கிறிஸ்டோபர் செய்திருந்தார். வள்ளியூர் நகரச் செயலாளர் திரு.ராஜா, ஒன்றியச் செயலாளர் திரு. நாகராஜ் மற்றும் பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மருத்துவ முகாமின் போது, டாக்டர் கிறிஸ்டோபர் தலைமையில் புதியதாக 10 க்கும் மேற்பட்டவர்கள் தவெக கட்சியில் இணைந்தனர்.

More News >>