விஞ்ஞானி நெல்லை சு.முத்து காலமானார் அப்துல்கலாமுடன் பணியாற்றியவர்

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நெல்லை சு.முத்து, திருவனந்தபுரத்தில் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 75ஆகிறது.

தமிழகத்தைச் சார்ந்த விஞ்ஞானி மற்றும் அறிவியல் எழுத்தாளரான சு.முத்துவின் தந்தை பெயர் எம். சுப்பிரமணிய பிள்ளை, தாய் பெயர் எம். சொர்ணத்தம்மாள். திருநெல்வேலியில் பிறந்த இவர் ஸ்ரீ ஹரிகோட்டா சதீஸ் தவான் விண்வெளி மையத்தில் விஞ்ஞானியாக பணியாற்றினார். முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுடன் பணியாற்றியவர்.

அறிவியல், சிறுவர் இலக்கியம், கவிதை, வரலாறு, மொழிபெயர்ப்பு, திறனாய்வு எனும் தலைப்புகளில் 70க்கும் அதிகமான நூல்களை நெல்லை முத்து எழுதியுள்ளார். இவரின் 4 புத்தகங்களுக்கு தமிழ்நாடு அரசின் சிறந்த நூலாசிரியர் விருது கிடைத்துள்ளது. மறைந்த விஞ்ஞானி முத்துவுக்கு மரகதம் என்ற மனைவியும் பாலசுப்ரமணியன், கலைவாணி என்ற மகளும் உண்டு.

More News >>