சென்னை விமான நிலையத்தில் புதிய முனையம்:மத்திய அமைச்சகம் ஒப்புதல்
சென்னை விமான நிலையத்தில் ரூ.2500 கோடி செலவில் புதிய முனையம் அமைப்பதற்கான ஒப்புதலை மத்திய அமைச்சகம் வழங்கி உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு பின்னர் முடிவு எடுக்கப்பட்டன. இதில், விமான நிலையங்களில் அடிப்படை வசிதிகள் அமைத்தல், புதிய முனையம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டன.
இதுகுறித்து மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப மற்றும் சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது: சென்னை, கவுகாத்தி, லக்னோ உள்ளிட்ட நகரங்களில் உள்ள விமான நிலையங்களில் கட்டமைப்பை வலுப்படுத்தவும், அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் புதிதாக முனையம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. சென்னை விமான நிலையத்தில் புதிய முனையம் அமைக்க ரூ.2467 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 36 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் சென்னை விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல், கவுகாத்தி விமான நிலையத்துக்கு ரூ.1383 கோடியும், லக்னோ விமான நிலையத்துக்கு ரூ.1232 கோடி ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இங்கு, ஒரு லட்சம் சதுர மீட்டர பரப்பளவில் விரிவாக்கம் செய்யப்படுகிறது.
லக்னோ விமான நிலையத்தில் 88 ஆயிரம் சதுர கி.மீ விரிவாக்கம் செய்யப்படுகிறது. 2023&2024ம் ஆண்டில் இங்கிலாந்து, ஜப்பான், ஸ்பெயின், ஜெர்மனி நாடுகளை மிஞ்சும் அளவுக்கு இந்தியாவில் விமானப் போக்குவரத்து வளர்ச்சி அடையும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com