திருநெல்வேலியில் பரபரப்பு: மந்திரவாதியால் இளம்பெண்ணுக்கு நடந்த கொடூரம்... களக்காடு காட்டில் என்ன நடந்தது?
திருநெல்வேலி மாவட்டம், கங்கனாங்குளம் கால்வாயில் மந்திரவாதியால் இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலியைச் சேர்ந்த கயல்விழி, சில மாதங்களுக்கு முன்பு காணாமல் போனதாகக் காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. திருநெல்வேலி மாவட்டக் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கயல்விழியைத் தேடி வந்தனர். இந்த நிலையில், கயல்விழி கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அதிர்ச்சி தகவல்களும் வெளியாகியுள்ளது.
மந்திரவாதி ஒருவரிடத்தில் தனது ஆசைகளை நிறைவேற்ற பூஜை செய்ய கூறி கயல்விழி கணிசமான தொகையைக் கொடுத்ததாகத் தெரிகிறது. ஆனால், மந்திரவாதி பூஜையில் எதிர்பார்த்தபடி எந்தப் பலனும் கிடைக்கவில்லை. இதனால், கயல்விழி தான் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டு மந்திரவாதியை தொந்தரவு செய்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அந்த மாந்திரீகவாதி, "உங்களை மற்றொரு மந்திரவாதியிடம் அழைத்துச் செல்கிறேன்' என்று கூறி களக்காடு பகுதிக்கு அழைத்துச் சென்று கொலை செய்துள்ளனர் பின்னர், கயல்விழியின் உடலை களக்காடு செல்லும் சாலையின் அருகேயுள்ள கங்கனாங்குளம் 80 அடி கால்வாயில் வீசி சென்று விட்டார். தற்போது, அந்த மந்திரவாதி பிடிபட்டுள்ளார். அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், கங்கனாங்குளம் கால்வாயில் கயல்விழியின் சடலத்தை போலீசார் தேடி வருகின்றனர்.
சேரன்மகாதேவி தீயணைப்பு நிலைய அலுவலர சூசை மரியவாளன் தலைமையிலான, தீயணைப்பு வீரர்களும் கடலத்தை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.தேடுதல் பணியின் போது சில முக்கிய தடயங்கள் சிக்கியுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இளம் பெண் கயல்விழிக்கு நடந்த இந்த கொடூரமான முடிவு, மாந்திரீகத்தின் பெயரால் மக்களை மூடர்களாக்கும் செயல் என சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.