திம்மராஜபுரம் வெங்கடாஜலபதி கோவில் மண்டபத்திற்கு சீல் வைக்க எதிர்ப்பு மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அருகே திம்மராஜபுரம் பகுதியில் 300 வருடங்கள் பழமையான வெங்கடாஜலபதி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான இடங்கள் கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு நபர்களால் வீடு கட்டி வசித்து வருகிறார்கள்.

இந்த கோவில் இந்து சமய அறநிலைத்துறையின் கீழ் வருகிறது.

கோவில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர் நீதிமன்றம் அடிப்படையில் இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள் இன்று கோவில் நடத்தி ஆக்கிரமித்து கட்டப்பட்ட சமுதாயக்கூடத்தை இடிக்க வந்தனர். இதற்கு அப்பகுதி மக்கள் மண்டபத்தின் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதிகாரிகளுக்கும், மக்களுக்கும் இடையேயான வாக்குவாதத்தின் போது ஒரு முதியவர் தனது கையில் மண்ணெண்ணெய் கேன் உடன் வந்த தன் மேல் ஊற்றிக் கொண்டார். அங்கு வந்த அறநிலையத்துறை அதிகாரி மீதும் ஊற்றினார்

அங்கு வந்த தடுக்க முயற்சித்த அதிகாரிகள் மீதும் மண்ணெண்ணெய் முழுவதும் கொட்டியது.

அசம்பாவிதம் எதுவும் நடைபெறுவதற்குள், காவல்துறையினர் மண்ணெண்ணெய் கேனை மீட்டு அந்த நபரையும் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதி பரபரப்பானது..

தற்போது சமுதாயக்கூடத்தை இடிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து பரபரப்பு நிலவுகிறது.

சமுதாயக்கூடம் மட்டுமல்ல ஏராளமான நபர்கள் பல ஆண்டுகளாக அந்தப் பகுதியில் வீடும் கட்டி உள்ளார்கள்.

இன்று சமுதாயக்கூடம் நாளை நமது வீடும் இடிபடலாம் என்ற அச்சத்தின் காரணமாக மக்களும் போராட்டத்தில் இறங்கி உள்ளனர்.

இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலையாக நிலவிக் கொண்டிருக்கிறது பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது

More News >>