தக்கலை: இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட், காரில் சீட் பெல்ட் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த போலீஸ் அதிகாரி
தக்கலை அருகே சாலையில் போக்குவரத்து விதிமுறைகளை முறையாக கடைப்பிடித்ததற்கு வாகன ஓட்டிகளை பாராட்டி போக்குவரத்து காவல் ஆய்வாளர் சுரேஷ் கொய்யாப்பழம் இலவசமாக வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பொதுமக்களின் நலன் கருதி பல்வேறு விதமாக விபத்துகள் ஏற்படாதவாறு போக்குவரத்து சாலை விதிமுறைகளை கடைப்பிடிப்பது அவசியம் குறித்து எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் போக்குவரத்து காவல் ஆய்வாளர் சுரேஷ் அவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.