விஜய் பிறந்த நாள்: புண்ணிய நதிகளில் இருந்து நீர் எடுத்து வந்து அம்பையில் மும்மத வழிபாடு

தமிழக கட்சி கழக தலைவர் விஜயின் 51-வது பிறந்த நாளை முன்னிட்டு புண்ணிய நதிகளில் இருந்து தண்ணீர் எடுத்து வரப்பட்டு கோவில்கள், பள்ளிவாசல்கள் , தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் 51 வது பிறந்தநாள் நாளை கொண்டாடப்படுகிறது . இதனை முன்னிட்டு கட்சி நிர்வாகிகள் ரசிகர்கள் பல்வேறு கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர் அந்த வகையில். திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தினர் விஜயின் 51 வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள முக்கியமான 26 புண்ணிய நதிகளில் இருந்து எடுத்துவரப்பட்ட புனித நீரை கொண்டு கோவில்கள் பள்ளிவாசல்கள் தேவாலயங்கள் போன்ற இடங்களில் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. குறிப்பாக கோவில்களில் சிறப்பு பூஜைகளுடன் அபிஷேகமும் நடைபெற்றது.

விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் பிறந்தநாள்டிஜிட்டல் பேனர்கள் வைத்திருந்தனர். இந்த நிலையில் நெல்லை மாநகர பகுதியில் வைக்கப்பட்டிருந்த தமிழக கட்சி கழக பேனர்களை அதிகாரிகள் அதிரடியாக அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் தமிழக வெற்றி கழகத்தினர் இடையே பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது

More News >>