திருநெல்வேலியில் 15 நாட்களுக்கு போராட்டங்கள், கூட்டங்களுக்கு தடை - நெல்லை ஆணையர் அறிவிப்பு

திருநெல்வேலி மாநகரில் பொது அமைதி மற்றும் சட்டம்-ஒழுங்கைப் பேணும் நோக்கில், சென்னை நகர காவல் சட்டம், 1997-இன் பிரிவு 41(2) இன் கீழ் ஒரு முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு, வரும் ஜூன் 22ம் தேதி நள்ளிரவு 12:00 மணி முதல் ஜூலை 6ம் தேதி நள்ளிரவு 12:00 மணி வரை மொத்தம் 15 நாட்களுக்கு அமலில் இருக்கும்.இந்த காலகட்டத்தில், திருநெல்வேலி மாநகர எல்லைக்குள் அனைத்து வகையான கூட்டங்கள், சந்திப்புகள், ஊர்வலங்கள், போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்த முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் நகரின் அமைதியான சூழலைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹதிமனி தெரிவித்துள்ளார்.

More News >>