சிவந்திபுரத்தில் பிரம்மாண்ட கபடி போட்டி : சொந்த மண்ணில் பி.ஆர்.சி. சிவந்திபுரம் அணி சாம்பியன்
திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரம் சிவந்திபுரத்தில், பொதுமக்கள் சார்பாக நடத்தப்பட்ட கபடி போட்டியில் தென் தமிழகத்தின் நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த அணிகள் பங்கேற்றன. இப்போட்டியில், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த மொத்தம் 18 தலைசிறந்த கபடி அணிகள் கலந்து கொண்டன. 67-வது ஆண்டாக இந்த போட்டி நடத்தப்பட்டது.
இந்த போட்டியில் அபாரமான ஆட்டத் திறனை வெளிப்படுத்திய பி.ஆர்.சி சிவந்திபுரம் அணியினர் முதல் பரிசைத் தட்டிச் சென்றனர். சொந்த மண்ணில் நடந்த ஆட்டத்தில் அவர்கள் கோப்பையை கைப்பற்றியனர். இரண்டாவது இடத்தை வீரவநல்லூர் ஜான் காலேஜ் அணி பெற்றது. மூன்றாம் பரிசை ஆர்.ஜே. ஹோட்டல் அணியும் நான்காம் பரிசை, வி.கே. புரம் வீரத்தமிழன் அணியும் கைப்பற்றின.வெற்றி பெற்ற அணிகளுக்கு சுழற்கோப்பையும் ரொக்கப்பரிசும் வழங்கப்பட்டது.
நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த அணிகள் ஒரே களத்தில் மோதியது, தென் தமிழக கபடி ரசிகர்களுக்கு ஒரு மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது.