திருவித்தான்புள்ளி அருகே வீடு வேண்டாம்- இலங்கை தமிழர்கள் எதிர்ப்பு

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அருகே  கோபாலசமுத்திரத்தில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிப்பவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது. ' கோபாலசமுத்திரம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் 250 குடும்பங்களைச் சேர்ந்த 700- க்கும் மேற்பட்டோர் சுமார் 35 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். நாங்கள் வசிக்கும் இடத்திலேயே அரசின் மூலம் வீடு கட்டி தர கோரிக்கை வைத்திருந்தோம். ஆனால் தற்போது எங்களுக்கு திருவிருத்தான்புள்ளி அருகே வீடு கட்டி தருவதற்கு ஆயத்த வேலைகள் நடைபெற்று வருவதாக அறிந்தோம்.

தற்போது நாங்கள் இருக்கும் இடத்தில் வீடு சொந்தமாக இல்லாவிட்டாலும் எங்கள் அருகில் மருத்துவமனை,பள்ளி, வேலைவாய்ப்பு  என அனைத்து வசதிகளும் உள்ளன. குறிப்பாக ஓலை முடைதல் பணியின் மூலம் எங்கள் பெண்கள் சிறிய அளவில் வருமானம் ஈட்டி வருகிறார்கள்.

ஆனால் ,திருவிருத்தான் புள்ளி அருகே எங்களுக்கு வீடு கட்ட தேர்வு செய்யப்பட்டுள்ள இடம் போக்குவரத்து வசதி இல்லாத இடமாகும். எனவே மாணவர்கள், வேலைக்கு செல்லும் பெண்கள், முதியவர்கள் எனஅனைவருமே சுமார் நான்கு கிலோமீட்டர் தூரம் நடக்க வேண்டிய நிலை ஏற்படும். இதனால் பள்ளிக்கூடம், மருத்துவமனைக்கு செல்பவர்கள் அவதிக்குள்ளாக நேரிடும். எனவே நாங்கள் இருக்கும் இடத்திலேயே எங்களுக்கு புதிதாக வீடு கட்டித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர். 

More News >>