இந்தியாவை வீழ்த்தி இழந்த மரியாதையைப் பெறுவோம்- ஆஸ்திரேலியா கிரிக்கெட் சபதம்

’இந்திய கிரிக்கெட் அணியை இந்திய மண்ணிலேயே வீழ்த்தி ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் மரியாதையை மீட்போம்’ என ஆஸ்திரேலியா கிரிக்கெட் நிர்வாகம் சபதம் ஏடுத்துள்ளது.

கிரிக்கெட் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சர்வதேச அளவில் மிகப்பெரும் அவப்பெயரை சம்பாதித்தது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி. கிரிக்கெட் விளையாட்டு என்றாலே ஆஸ்திரேலியாதான் என்ற நிலை மாறி சர்வதேச கிரிக்கெட் ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்துள்ளது ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி.

இந்நிலையில், இன்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ஜஸ்டின் லாங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் துவக்க ஆட்டக்காரரான ஜஸ்டின் ஆஸ்திரேலிய அணி இழந்த மதிப்பை மீண்டும் பெற்றுத்தந்துவிட வேண்டும் என்ற குறிக்கோளுடன் களம் இறங்கியுள்ளார்.

அவர் கூறுகையில், “கடந்த 2004-ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியை இந்திய மண்ணிலேயே வீழ்த்தினோம். அன்று நான் தான் துவக்கநிலை பேட்ஸ்மேன். அப்போதெல்லாம், இந்திய அணியை வீழ்த்துவது எல்லாம் பெரிய காரியம்.

எங்கள் தகுதியை தீர்மானிக்க இந்திய அணிக்கு எதிராக விளையாடியே உறுதிபடுத்திக் கொள்வோம். அதே போல் எங்கள் அணி தற்போது இழந்துள்ள மரியாதையை இந்தியாவை இந்திய மண்ணிலேயே வீழ்த்தி மீட்போம்” என ஆவேச சபதம் எடுத்துள்ளார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>