கழுகுமலை அருகே விபத்தில் தந்தை பலி மகள் படுகாயம்
கழுகுமலை அருகே பைக் மீது தனியார் பள்ளி் பேருந்து மோதிய விபத்தில் தந்தை உயிரிழந்தார். மகள் படுகாயம் அடைந்தார்.விருதுநகர் மாவட்டம் சிவகாசி மடத்துப்பட்டி பகுதியை சேர்ந்தவர் உத்தரப்பன் (62). அவரது மகள் அய்யம்மாள் (40). இருவரும் நேற்று தூத்துக்குடி மாவட்டத் கழுகுமலை அருகே உள்ள சங்கரலிங்கபுரம் கிராமத்தில் உள்ள நாட்டு வைத்தியரிடத்தில் சிகிச்சை எடுக்க மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். அங்கு சிகிச்சை முடிந்து இருவரும் ஊருக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பினர்.
சங்கரலிங்கபுரம் -கோவில்பட்டி சாலையில் சென்றபோது, பின்னால் வந்த தனியார் பள்ளிப் பேருந்து பைக் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். உத்தரப்பன் சம்பவ இடத்திலேயே பலியானார்.
பலத்த காயமடைந்த அய்யம்மாளை போலீசார் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து நாலாட்டின்புத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பள்ளி பேருந்தின் டிரைவர் வரதராஜனை பிடித்து விசாரித்து வருகின்றனர்.