திருநெல்வேலியில் கார் மீது தலைகீழாக கவிழ்ந்த கல்குவாரி லாரி... பயணிகளுக்கு என்ன நடந்தது?

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த ஒன்றரை மாதங்களுக்கும் மேலாக கல் குவாரிகள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், தாழையூத்து பகுதியில் உள்ள ஒரு ஜல்லி கற்கள் தயாரிக்கும் கிரஷர் குவாரியில் இருந்து வந்த ஒரு லாரி, இன்று ( ஜூன் 24) திருநெல்வேலி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் காருடன் நேருக்கு நேர் மோதி தலைகீழாக கவிழ்ந்து காரின் மீது விழுந்தது. விபத்தில் காரில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமான லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்கள்.

இந்த விபத்து, மாவட்டத்தில் குவாரிகள் மற்றும் கிரஷர் குவாரிகள் செயல்பட தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில் நடந்துள்ளதால் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. தடை இருந்தபோதிலும் லாரி எப்படி இயக்கப்பட்டது. பொதுப் போக்குவரத்து அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் வந்தது எப்படி ?என்பது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். வருவாய்த் துறை அதிகாரிகளும் போக்குவரத்து காவல் துறையினரும் இணைந்து இந்த லாரி அனுமதி இல்லாமல் இயக்கப்பட்டதா? என்றும் விசாரித்து வருகின்றனர்.

ஜல்லி கற்கள் ஏற்றி வரும் லாரிகளின் வேகம் அனைவரும் அறிந்ததே. தடை செய்யப்பட்ட காலத்திலும் இது போன்ற விபத்துக்கள் ஏற்படுவது எப்படி? என்கிற கேள்வியும் எழுகிறது. இந்த விபத்து தொடர்பான முழு விவரங்களையும் கண்டறிய தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

More News >>