பணகுடியில் 75 லட்சம் செலவில் கட்டப்பட்டு வீணாக கிடக்கும் மேல்நிலை குடிநீர் தொட்டி
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே அமைந்துள்ளது பணகுடி பேரூராட்சி. இங்கு, சுமார் 15 ஆயிரம் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் அதிக வாக்காளர்களை கொண்ட பேரூராட்சியாக பணகுடி பேரூராட்சி உள்ளது. இங்கு மொத்தம் 30 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். அதேபோல் மாநிலத்தில் அதிக காற்றாலைகள் இயங்குவதும் இங்குதான். பணகுடி, மாவட்டத்தின் தெற்கு பகுதியாக உள்ளதால் தாமிரபரணி ஆற்று நீர் இந்த வழியாக செல்வதில்லை. இப்பகுதியின் தண்ணீர் ஆதாரமாக அனுமன் நதி உள்ளது.
இங்கு, நீண்டகாலமாக குடிநீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. பேரூராட்சி நிர்வாகம் வழங்கும் தண்ணீர் போதுமானதாக இல்லை என்கிற குற்றச்சாட்டும் உள்ளது. இந்த நிலையில், பணகுடியில் திருநெல்வேலி முன்னாள் எம்.பி ஞானதிரவியம் எம்.பியின் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 75 லட்சத்தில் குடிநீர் தொட்டி கட்டப்பட்டது. இந்த தொட்டி திறக்கப்பட்டு, ஒன்றரை ஆண்டுகள் ஆகியும் பயன்பாட்டுக்கு வரவில்லை. சுமார் 3 லட்சம் லிட்டர் கொள்ளவு கொண்ட இந்த தொட்டியை விரைவில் திறக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.