என் வாழ்நாள் லட்சியத்தை அடைந்துவிட்டேன்- வாய்ப்பு கிடைத்த பெருமிதத்தில் விராட்!
இந்தியக் கேப்டன் விராட்கோலிக்கு இங்கிலாந்து கிரிக்கெட் லீக் தொடரில் விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்திய அணியின் நட்சத்திர வீரரும் கேப்டனுமான விராட் கோலி தற்போது ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார். பெங்களுரூ ராயல் சாலஞ்சர்ஸ் அணியின் கேப்டனாகப் பட்டையைக் கிளப்பி வரும் கோலி, விரைவில் இங்கிலாந்து கிரிக்கெட் லீக் தொடர் ஒன்றிலும் விளையாட உள்ளார்.
இந்தியாவில் ஐபிஎல் எவ்வளவு பிரபலமோ அதுபோல், இங்கிலாந்தில் நடைபெறும் கவுண்டி தொடர் வெகு பிரபலம். அந்தக் கிரிக்கெட் தொடரில் கவுண்டி சர்ரே அணிக்காக ஜூன் மாதம் முழுவதும் விளையாடுவதற்காக விராட் கோலி ஒப்பந்தமாகியுள்ளார்.
ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கும் முன்னரே கவுண்டி தொடரில் நிச்சயமாக கோலி விளையாடுகிறார். சர்ரே, எஸ்செக்ஸ் போன்ற அணிகளில் விளையாடுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக பிசிசிஐ வட்டாரம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது அதிகாரப்பூர்வமாக கோலி விளையாட ஒப்பந்தமாகியுள்ளது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோலி கூறுகையில், "கவுண்டி தொடரில் விளையாட வேண்டும் என்பதெல்லாம் என் வாழ்நாள் குறிக்கோளாக இருந்தது. எனக்கு வாய்ப்பு அளித்த சர்ரே அணிக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்" எனக் கூறியுள்ளார்.
ஜூன் மாதம் முழுவதும் கவுண்டி தொடரில் விளையாட இருப்பதால் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இந்தியா பங்குபெறும் டெஸ்ட் தொடரில் பாதியில் கோலி இணைந்துகொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com