திருநெல்வேலியின் முதன் பெண் ஐ.ஏ.எஸ் ஆணையாளர் மோனிகா ரானா பதவியேற்பு

திருநெல்வேலி மாநகராட்சியின் புதிய ஆணையாளராக மோனிகா ரானா ஐ.ஏ.எஸ் இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு நெல்லை மேயர் ராமகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

ஹரியானா மாநிலம் குருகிராமை சேர்ந்த மோனிகா ரானா , கடந்த 1982 ஆம் ஆண்டு பிறந்தவர். 2010 ஆம் ஆண்டு பேட்ச்சை சேர்ந்த திறமையான அதிகாரி ஆவார். சிவில் சர்வீஸ் தேர்வில் 70வது இடத்தைப் பிடித்தவர்.

மோனிகா ரானா வணிகவியலில் இளங்கலை பட்டமும் (Bachelor of Commerce), பொருளாதாரத்தில் முதுகலை பட்டமும் (Master of Arts in Economics) பெற்றுள்ளார். ஆசிரியையாக இருந்து ஐ.ஏ.எஸ் அரிகாரி ஆனவர். இவரது தந்தை ஒரு ஐ.எஃப்.எஸ் (IFS) அதிகாரி ஆவார் . திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளராக நியமிக்கப்படுவதற்கு முன்பு, மோனிகா ரானா தமிழகத்தின் பல்வேறு முக்கியப் பதவிகளை வகித்துள்ளார். மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மற்றும் திட்ட இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.

இவரின், பரந்த அனுபவம், நிர்வாகத் திறன் போன்றவை திருநெல்வேலி மாநகரின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றும் என தாராளமாக நம்பலாம்.

இதற்கு முன்பு திருநெல்வேலி மாநகராட்சியில் பானுமதி, லட்சுமி, விஜயலட்சுமி என மூன்று பெண் கமிஷனர்கள் பணியாற்றியுள்ளனர்.ஆனால், இவர்களில் யாரும் நேரடி ஐஏஎஸ் அதிகாரிகள் இல்லை.

More News >>