இந்தியாவை ஆளப் போகும் தூத்துக்குடி கார்... உற்பத்தி தொடக்கம் !

சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், உலகின் முன்னணி எலக்ட்ரிக் வாகனத் தயாரிப்பு நிறுவனமான வியட்நாம் நாட்டைச் சேர்ந்த வின்பாஸ்ட் நிறுவனம், தூத்துக்குடியில் ரூ.16 ஆயிரம் கோடியில் , மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க ஒப்பந்தம் மேற்கொண்டது . தூத்துக்குடி சில்லாநத்தம் சிப்காட் பகுதியில் 408 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த பேட்டரி கார் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டினார்.

தொடர்ந்து ,கட்டுமானப் பணிகளை வேகமாக நடந்து வந்தன. முதற்கட்டமாக ரூ.1,119.67 கோடி செலவில் 114 ஏக்கரில் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஆண்டுக்கு 50 ஆயிரம் வாகனங்களை உற்பத்தி செய்யும் வகையில் 2 பணிமனைகள் அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது, தூத்துக்கு வின்பாஸ்ட் கார் தொழிற்சாலை மின்சார கார் உற்பத்தியை தொடங்கியுள்ளது. வி.எப். 7 என்ற மாடல் கார் முதலில் தயரிக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 1.5 லட்சத்துக்கும் அதிகமான மின்சார கார்களை உற்பத்தி செய்யும் வகையில் தூத்துக்குடி ஆலை உருவாக்கப்பட்டுள்ளது. பேட்டரி உற்பத்தியையும் தொடங்கி நாடு முழுவதும் சார்ஜிங் நிலையங்கள் அமைத்து உள்நாட்டு சந்தையை பிடிக்கவும் வின்பாஸ்ட் திட்டமிட்டுள்ளது.

இங்கு உற்பத்தி செய்யப்படும் பேட்டரி கார்கள் இலங்கை, மத்திய கிழக்கு நாடுகளுக்கு தூத்துக்குடி துறைமுகம் மூலம் ஏற்றுமதி செய்யப்படும்.இங்கு தயாரிக்கப்படும் பேட்டரி கார்கள் ஏற்றுமதி மற்றும் விற்பனையின் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்த வருவாயும் அதிகரிக்கும் என்றும் நம்பப்படுகிறது.

வழக்கமாக, சென்னையில்தான் கார் தொழிற்சாலைகள் அமைக்கப்படும். மாறாக, தமிழகத்தின் தென் முனையில் கார் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது கார் உற்பத்தியின் தொழிலில் முக்கிய மாற்றமாகவே பார்க்கப்படுகிறது.

More News >>