கூந்தன்குளத்தில் தண்ணீர் தட்டுப்பாடு நாங்குநேரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை

கூந்தன்குளத்தில் முறையாக குடிநீர் வழங்காததைக் கண்டித்து, கிராம மக்கள் காலிக் குடங்களுடன் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லை மாவட்டம், நாங்குநேரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கூந்தன்குளம் 2 வது வார்டு பகுதியில் 50 க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில் , கடந்த 5 தினங்களாக முறையான குடிநீர் வழங்கப்படவில்லை. இதானல், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். பொதுமக்கள் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை .

இதனால், ஆத்திரமடைந்த கிராம மக்கள் காலி குடங்களுடன் நாங்குநேரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளித்தனர் . உடனடியாக, தண்ணீர் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு, கலைந்து சென்றனர்.

More News >>