நாகர்கோவிலில் கார் ஷோரூமில் தீ விபத்து... 12 கார்கள் எரிந்து நாசம்
நாகர்கோவிலில் ஏ.ஆர்.கேம் ரோட்டில் தனியார் கார் சர்வீஸ் மையத்தில் இன்று (ஜூன் 26) அதிகாலை 2 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்புதுறையினர் சம்பவ இடத்துக்கு வந்து வெகு நேரம் போராடி தீயை அணைத்தனர்.
எனினும், ஷோரூமில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 12 கார்கள் தீயில் கருகி சேதமடைந்தன. விபத்துக்கான காரணம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.