எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் : ஷூட்டிங் தொடங்கியது
கடவுள் இருக்கான் குமாரு படத்திற்கு பிறகு இயக்குனர் எம்.ராஜேஷ் இயக்கும் புதிய திரைப்படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அதற்கான ஷூட்டிங் பூஜையுடன் நேற்று துவங்கப்பட்டுள்ளது.
சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் வெற்றி பெற்றநிலையில் கடவுள் இருக்கான் குமாரு திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு போகவில்லை. இந்நிலையில் ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பில் ராஜேஷ் இயக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் நேற்று துவங்கப்பட்டது. நாயகனாக சிவகார்த்திகேயனும் நாயகியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் நடிக்கும் புதியப்படத்தின் ஒளிப்பதிவு வேலைகளை ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியம் கவனிக்கிறார்.
சிவகார்த்திகேயன் நடித்து வெற்றிபெற்ற வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தின் வசனகர்த்தா இயக்குனர் எம்.ராஜேஷ் என்பது குறிப்பிடத்தக்கது. பெயரிடப்படாத இப்படத்தின் உரிமையை சன் தொலைக்காட்சி மிகப்பெரிய தொகைக்கு வாங்கியதாக தகவல்கள் கசிந்து வருகிறது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com