டி.என்.பி.எல் : மதுரை அணியை வீழ்த்தியது திருச்சி சோழா

ஸ்ரீராம் டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடரில் மதுரைக்கு எதிரான ஆட்டத்தில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திருச்சி அணி வெற்றி .

திருநெல்வேலியில் நடைபெற்ற டி.என்.பி.எல். 23-வது லீக் ஆட்டத்தில் திருச்சி கிராண்ட்-மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற திருச்சி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

களமிறங்கிய மதுரை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்தது. 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய திருச்சி அணி 18.1 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழந்து 137 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.

More News >>