தூத்துக்குடி அதிமுக பிரமுகர் கொலை கொல்லம்பரும்பு திமுக ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் சரண்

துத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகா குறுக்குச்சாலையை அடுத்த கொல்லம்பரும்பு கிராமத்தை சேர்ந்தவர் முத்து பாலகிருஷ்ணன்.இவர், கடந்த 1996 முதல் 2001 வரை கொல்லம்பரும்பு பஞ்சாயத்து தலைவராக பதவி வகித்துள்ளார். தற்போது அதிமுக கிளை செயலாளராக உள்ள முத்து பாலகிருஷ்ணன், இப்பகுதியில் ரியல் எஸ்டேட் தொழிலிலும் ஈடுபட்டு வந்தார்.

இந்த நிலையில், முத்துபாலகிருஷ்ணன் லாரி ஏற்றி படுகொலை செய்யப்பட்டார். தற்போதைய கொல்லபரும்பு ஊராட்சி மன்ற திமுக தலைவர் கௌரியின் கணவர் கருணாகரன்தான் கொலைக்கு காரணமென்று உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொழில் தொடர்பாகவும் தேர்தல் முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததாக சொல்லப்பட்டது.

இந்த நிலையில், ஊராட்சி மன்ற தலைவர் கௌரியின் கணவர் கருணாகரன், மகேஷ், கற்பகராஜ் ஆகியோர் காவல் நிலையத்தில் இன்று சரண் அடைந்துள்ளனர். இந்த கொலைக்கு அதிமுக பொது செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News >>