கீரிப்பாறையை கதி கலங்க வைக்கும் ஒன்றை யானை ... எம்.எல்.ஏ வேண்டுகோள்
கன்னியாகுமரி மாவட்டம் கீரிப்பாறை லேபர் காலனி பகுதியில் ஒற்றை யானை அடிக்கடி சுற்றி வருகிறது. நேற்று, அங்குள்ள வீட்டிற்குள் அந்த யானை புகுந்து அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கி நாசமாக்கியது . வீட்டில் யாரும் இல்லாததால், உயிர் சேதமோ காயமோ ஏற்படவில்லை.
இந்த ஒற்றை யானையின் நடமாட்டத்தால், அப் பகுதியில் வசிக்கும் மக்கள் மிகுந்த அச்சத்தில் வாழ்கின்றனர். எனவே, மாவட்ட வனத்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சரும் கன்னியாகுமரி தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான என்.தளவாய் சுந்தரம் கோரிக்கை விடுத்துள்ளார்.